IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சீனாவில் 90 லட்சம் செல்போன்கள் சுவிட்ச் ஆப்! திடுக்கிடும் தகவலால் உலக நாடுகள் அச்சம்

Get real time updates directly on you device, subscribe now.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா தற்போது 125 நாடுகளை ஆட்டிப்டைத்துக் கொண்டிருக்கிறது. சீனாவில் பாதிக்கப்பட்ட மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு அதிகரிக்கக ஆரம்பித்துள்ளது. முன்னதாக கணக்கிடப்பட்டதில் தவறு ஏற்பட்டுள்ளது எனவும் சுமார் 50 சதவீதம் அளவிற்கான மரணத்தை கணக்கிலிடத் தவறிவிட்டதாக சீனா அரசு சமீபத்தில் ஒப்புக்கொண்டது.

தற்போது சீனாவில், 82,816 பேர் பாதிக்கப்பட்டு, 4,632 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஹாங்காங் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தற்போது அறிவிக்கப்பட்டதை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

பிப்ரவரி 20ம் தேதி நிலவரப்படி, 55,508 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சீனா கூறியிருந்தது. ஆனால், சீனாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தகவல்களின் அடிப்படையில் ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுப்பார்க்கும் போது பாதிப்பு எண்ணிக்கை 2,32,000 ஆக இருக்கலாம் எனவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதேபோல் இங்கிலாந்து தொழில் தொடர்பு நிறுவனம் ஒன்றின் ஆராய்ச்சியில் சீனாவில் கடந்த நவம்பர் மாதம் பயன்படுத்தப்பட்ட 90 லட்சம் செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் 90 லட்சம் செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதற்கு காரணம் கொரோனாவாக இருக்கலாம் என கூறியுள்ள இங்கிலாந்து நிறுவனம் 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாக கணக்கிட்டுக்கொண்டாலும் இறந்த விகிதம் எவ்வாறு இருக்கலாம் என்பதனை கணக்கிடுவது மலைப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த புள்ளி விபரங்கள் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader