IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சில்லி இட்லி

72


தேவையான பொருட்கள் :


இட்லி – 4சதுரமாக கட் செய்தது, பெரிய வெங்காயம் – 1நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுத்து – 1 ஸ்பூன், சில்லி சாஸ் – 1 ஸ்பூன், சோயா சாஸ் – 1 ஸ்பூன், தக்காளி சாஸ் – 1 ஸ்பூன், குடைமிளகாய் – ஒன்று, நறுக்கிய பூண்டு – 2 ஸ்பூன், வெங்காய தாள் நறுக்கியது 3 ஸ்பூன், உப்பு தேவையான அளவு.


இப்படித்தான் செய்யணும் :

  • நான்ஸ்டிக்கடாயில் இட்லி துண்டுகளை போட்டு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இட்லி துண்டுகளை போட்டு பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

  • பின்பு நான்ஸ்டிக் கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் பூண்டு போட்டு வதக்கி பின்பு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

  • சிறிது உப்பு சேர்த்து 2நிமிடம் வதக்கி அதனுடன் குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பின்பு அதோடு இன்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  • அதனுடன் மூன்று சாஸ்களையும் போட்டு வதக்கி அதோடு பொரித்த இட்லி துண்டுகளை போட்டு வதக்கவும்.

  • தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளரி இறக்கி வெங்காயத்தூள் போட்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்.


#chilli #Idly