IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

8ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 73 வயது மதப்போதகர்!

18


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 8-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் அவரது தந்தை இறந்துவிட்டார். தாயும் மனநலம் பாதித்து சுயநினைவின்றி உள்ளார்.


இந்த சுழ்நிலையை பயன்படுத்தி ஜெபம் பண்ணுவதாக வீட்டிற்கு வந்த மதபோதகர் வெற்றி ராஜா (73) சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி தனது பாட்டியிடம் சிறுமி கூறியுள்ளார்.


இதுகுறித்து பாட்டி பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மும்தாஜ், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதபோதகர் வெற்றி ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.