IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

குழந்தைகளுக்குப் பரவுது தொண்டை அடைப்பான்! சுகாதரத்துறை அலர்ட்!!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் தீவிரமாக பரவி வருவதால் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று சுகாதரத்துறை அறிவித்துள்ளது.


இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மீண்டும் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தொண்டை அடைப்பான் நோய் பரவத் தொடங்கியுள்ளது. இந்த நோய் தமிழகத்தில் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு வந்த நிலையில், கால் நூற்றாண்டுக்குப் பின்னர் மீண்டும் பரவி வருகிறது.


ஈரோடு மாவட்டம் தாளவாடி, சத்திமங்கலம், அந்தியூர் பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் மட்டுமே 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் காரணமாக 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.


தற்போது தமிழகத்தில் தொண்டை அடைப்பான் நோயை கட்டுபடுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நோய் பாதித்துள்ள தாளவாடி சத்தியமங்கலம், அந்தியூர் பகுதிகளில் மருத்துவக் முழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.


அந்த பகுதியில் இது வரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் யாரும் தொண்டை அடைப்பான் நோயை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம், என்று கூறியுள்ளார்.


மேலும், குழந்தை பிறந்து மூன்று மாதத்தில் 5 தடுப்பூசிகள் போட வேண்டும். 16 மாததில் இருந்து 24 மாதத்திற்குள் 3 தடுப்பூசிகள் போட வேண்டும். 5 வயதில் இரண்டாவது மூன்றுநோய் தடுப்பூசி போட வேண்டும். கர்ப்பிணிகளும் பெண்களும் இந்த தடுப்பூசியை போட வேண்டும். இருமல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader