IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தந்தையுடன் சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!

0 17


மருத்துவமனை லிப்டில் போதையில்  ஆசாமி ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.


சென்னை எழுப்பூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்க உறவினர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட உறவினர் ஒருவரை பார்க்க சிறுமி (வயது 10) ஒருவர் தனது தந்தையுடன் வந்துள்ளார்.



2-வது மாடியில் இருப்பவரை பார்க்க சிறுமி, தந்தையும் லிப்டில் ஏறியுள்ளனர். மூன்றாவதாக ஏறிய நபர் மது குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார். சிறுமி அவருடைய தந்தைக்கும் போதையில் இருந்த நபருக்கும் நடுவில் நின்று கொண்டிருந்தாள். அப்போது போதையில் அந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.



சிறுமி உடனடியாக தந்தையிடம் கூறியுள்ளார். லிப்டில் இருந்து வெளியே வந்ததும், சிறுமியின் தந்தையும் பொது மக்களும் சேர்ந்து அந்த நபரை அடித்து துவைத்தனர்.


அதன் பிறகு அந்த நபரை மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை விசாரிக்கும் போது  அவருடைய பெயர் சஞ்சய் காந்தி (வயது 37) என்பதும், இவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.


பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள் கைது

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் காந்தியை கைது செய்தனர். அதன்பின்பு இந்த வழக்கு சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

#child #rape #father #drug #chennai