IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பெற்றோர்களே உஷாரா இருங்க? ரெயில் நிலையத்தில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல்!!

Get real time updates directly on you device, subscribe now.

ரெயில் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை கடத்த முயன்ற வாலிபர் சிக்கினார். அவரை பிடித்த குழந்தையின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.


பிளஸ்2 மாணவி குழந்தை பெற்றெடுத்த கொடுமை கர்ப்பமாக்கிய மாணவன்

வேலூர் மாவட்டம் சோளிங்கபுரம் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த 20 பேரில் துர்கா பிரசாத் அவரது மனைவி பார்வதி தம்பதியரும் இருந்தனர். அனைத்து தொழிலாளர்களும் வேலையை முடித்துவிட்டு அங்குள்ள ரயில் நிலைய வளாகத்தில்தான் தூங்குவார்கள்.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலை 4 மணி அளவில் துர்காபிரசாத், அவரது மனைவி பார்வதி ஆகியோர் தங்களது ஒரு வயது குழந்தை ரிஷிகவந்தாவுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தினேஷ் (வயது 29) என்ற ஆசாமி குழந்தையைக் கடத்த முயன்றுள்ளான். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தினேஷ் கையில் எடுத்தான். அப்போது குழந்தை கண் விழித்து அழத்தொடங்கியது. குழந்தையின் அழுகையை சமாளிக்க முடியாமல் தினேஷ் திணறினான். இதனால் குழந்தை மேலும் சத்தமாக அழுதது.

குழந்தையின் அழுகுரல் கேட்ட பெற்றோர் மற்றும் உடன் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளிகள் முழித்து கொண்டனர். அனைவரையும் பார்த்த தினேஷ் குழந்தையை விட்டு விட்டு ஓட முயன்றான். ஆனாலும் அவனை குழந்தையின் உறவினர்கள் விரட்டிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். அதன் பிறகு குழந்தை கடத்தல் ஆசாமியை ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தினேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடத்தல் ஆசாமி தினேஷ் இதற்கு முன்பு இதுபோல் குழந்தைகளை கடத்தியுள்ளானா? அவன் தனியாக கடத்தலில் ஈடுபட்டானா அல்லது அவனுக்குப் பின்னால் கடத்தல் கும்பல் இருக்கிறதா என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகிறார்கள்.

#child #kidnapping #gang #vellore

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader