IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இப்படியுமா இருப்பாள் தாய்? குழந்தையை மறக்கடித்த டிக்டாக் கள்ளக்காதல்!

Get real time updates directly on you device, subscribe now.


`டிக்டாக்’ மோகம் கொண்ட மனைவி கள்ளக்காதலனோடு சேர்ந்து மகனை கொடுமைப்படுத்துவதாக திருச்சி இன்ஜினியர் புகார் கூறியுள்ளார். அவரும் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளதால் குழந்தையின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.


திருச்சியை சேர்ந்தவர் மகேஷ் (37).இன்ஜினியர் இருவரும் திருநெல்வேலியை சேர்ந்த திவ்யா வும் (32) முகநூல் மூலம் 2007 ல் நட்பாகினர் .வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இவர்கள் இருவீட்டார் எதிர்ப்பையும் மீறி 2008 ல் திருமணம் செய்துகொண்டனர். 2013ல் ஆண் குழந்தை பிறந்தது. கணவன், மனைவி குழந்தையோடு திருச்சியில் வசித்தனர். டிக்டாக் மியூசிக்கலி செயலிகளை திவ்யா அதிகம் பயன்படுத்தியதால் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து திவ்யா காதல் கணவனை விட்டுப் பிரிந்து குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.


பின்னர் விவாகரத்து கேட்டு திவ்யா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த தலைமையாசிரியர், திவ்யாவின் தாயாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மகேஷ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது.


உடனடியா நெல்லை வந்த மகேஷ், குழந்தைகள் நலக்குழுவில் புகார் கூறினார். அதில், திவ்யாவிற்கும், அன்சாரி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது. இருவரும் சேர்ந்து குழந்தையை கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். புகார் தொடர்பாக குழந்தைகள் நலக்குழு அதிகாரி சந்திரகுமார் விசாரணை நடத்தினார்


அவர் கூறுகையில், திவ்யாவை பிரிந்தபின் மகேஷ் மறுமணம் செய்து கொண்டார். குழந்தைக்கு தனது அப்பா மகேஷை யார் என்றே தெரியவில்லை. குழந்தையின் உடல்நிலை பதிக்கப்பட்டுள்ளதால் குழந்தையை தாயுடன் அனுப்பியுள்ளோம். மேலும் அன்சாரியும் தற்போது வெளிநாடு சென்று விட்டார். 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் குழந்தையை ஆஜர்படுத்த கூறியுள்ளோம்.அப்போது விசாரித்து முடிவெடுக்கப்படும், என்றார்..

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader