IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

விவசாயிகளுக்கு நேசக்கரம் நீட்டும் அதிமுக அரசு – முதல்வர் பழனிச்சாமி

Get real time updates directly on you device, subscribe now.

விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள நேசக்கரம் நீட்டி உதவி செய்யும் அதிமுக அரசு என தமிழக முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.

மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக சென்று, முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அலுவலக பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிச்சாமி கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கள்ளக்குறிச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கையால் வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் எப்போது பாதிக்கப்பட்டாலும் அதிமுக அரசு நேசக் கரம் நீட்டி உதவும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பொருட்களை பாதுகாத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு பல்வேறு வகையான மானியங்கள் வழங்கப்படு கின்றன. கால்நடை பூங்கா விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

பருவமழை நீர் வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவாக தீர்வு காணப்பட்டுள்ளன என முதல்வர் தெரிவித்தார்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader