இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.3000 நிதி வழங்க முதல்வர் உத்தரவு

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல தொழில்கள் நசுக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பலரும் வருமானம் இன்றி தவிக்கின்றனர். பாதுகாப்பு கருதி ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் வேலைக்கு வெளியே செல்ல முடியாத நிலையில் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப் பட்டுள்ளனர். இதனை கருத்திற் கொண்ட அரசு, மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதி உதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்டப்படிப்பை முடிப்பவர்கள் 4 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும் என்பதால் இளம் வழக்கறிஞர்களுக்கு இந்த நிதியுதவியை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More