IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஜாமீன் கிடைத்தும் சிதம்பரம் வெளியே வருவதில் சிக்கல்

0 35

முன்னாள் அமைச்சர் சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்தும் விடுதலை ஆகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றன. இந்த வழக்கில் சிபிஐ கடந்த 21ம் தேதி வழக்கு பதிவு செய்து சிதம்பரத்தை கைது செய்தது. அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது. சிபிஐ வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளன. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது 4 நாட்கள் விசாரணை நடந்தது.

இன்று காலை நீதிபதி பானுமதி இதில் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்தார். நிபந்தனைகளின் படி ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் பிணைத் தொகையாகவும் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்தும், சிபிஐ விசாரணைக்கு அழைக்கும்போது ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டனர். இருப்பினும் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்துள்ளதால், சிதம்பரம் விடுதலையாக முடியாது.

அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தை வருகின்ற 24ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் தான் விடுதலையாக முடியும். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி அரசுத் தரப்பு சாட்சியாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.