IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிதம்பரம் சிபிஐ குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு

0 12


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மனைவி கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ தரப்பில் கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் சிதம்பரம், கார்த்தி, இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி உள்ளிட்ட 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது. அதில் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இதன் விசாரணையை அக்.,24 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.


#Chidambaram #Adopts #CBI #Criminal #Investigation