IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பெண்ணின் உயிரை பறித்த உருளைக்கிழங்கு பஜ்ஜி

Get real time updates directly on you device, subscribe now.

பெண்ணின் உயிரை பறித்த உருளைக்கிழங்கு பஜ்ஜி

பேசிக்கொண்டே உருளைக்கிழங்கு பஜ்ஜி சாப்பிட்டதால் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி பெண் உயிரிழந்தார்.

சென்னை சூளைமேடு காமராஜ் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர், ராயப்பேட்டையில் உள்ள டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் வேலைபார்த்துவருகிறார். இவரின் மனைவி பத்மாவதி. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால் பத்மாவதி தனது அம்மா வீட்டில் கணவருடன் வசித்து வந்தார். வழக்கம் போல் கங்காதரன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் பத்மாவதியும் அவரின் அம்மா சுகுணாவும் இருந்தனர்.

அப்போது இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது பஜ்ஜி சாப்பிட முடிவு செய்தனர். இதையடுத்து கடைக்குச் சென்று உருளைக்கிழங்கு பஜ்ஜியை சுகுணா வாங்கிவந்தார். பின்னர் இருவரும் பஜ்ஜியை சாப்பிட்டனர். திடீரென பத்மாவதியின் தொண்டைக்குள் பஜ்ஜி சிக்கிக்கொண்டது. அதனால் அவரால் சத்தம்போட முடியவில்லை. அதைப்பார்த்த பத்மாவதியின் அம்மா, தண்ணீர் கொடுத்துள்ளார். ஆனாலும் பத்மாவதியால் சரியாக மூச்சுவிடமுடியவில்லை.

பத்மாவதிக்கு மூச்சுத்திணறல் அதிமானதும் அவரின் அம்மா, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். அவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் வீட்டுக்கு வந்த ஆம்புலன்ஸில் பத்மாவதியைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பத்மாவதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர்.

இது குறித்து சூளைமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் போரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் உருளைக்கிழங்கு பஜ்ஜியை பத்மாவதி, பேசிக் கொண்டே சாப்பிட்டுள்ளார். அதனால்தான் மூச்சுகுழாய்க்குள் உருளைக்கிழங்கு பஜ்ஜி சிக்கியது தெரிவந்துள்ளது.

#chennai #women #eating #potato #baji #death

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader