மாமல்லபுரம் விசிட்! சீன அதிபருக்கு குறிவைத்த நைஜீரிய இளைஞரின் பகீர் பின்னணி

Get real time updates directly on you device, subscribe now.


சீன அதிபர் 2நாள் அரசுமுறை பயணமாக மாமல்லாபுரத்திற்கு வருகை தருகிறார். இவருடன் பிரதமர் மோடியும் வருகை தருகிறார். இந்நிலையில் சீன அதிபர் சென்னையில் தங்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சீன அதிபர் ஜின்பிங் 2நாள் அரசுமுறை பயணமாக அக்டோபர் 11ம் தேதி சென்னை வருகிறார். அன்று பிற்பகல் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்து சேரும் சீன அதிபர் ஜின்பிக்குக்கு கலைநிகழ்ச்சிகள் மற்றும் நடனம் அமைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு முடிந்ததும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சீன அதிபர் ஓய்வெடுக்கிறார். அதன்பிறகு மாலை 4மணிக்கு மேல் சீன அதிபர் கார் மூலம் மாமல்லாபுரம் செல்கிறார்.


சென்னை வருகை தரும் பிரதமர் மோடியும் சீன அதிபருடன் மாமல்லாபுரம் செல்கிறார். பின்பு மாமல்லாபுரம் செல்லும் இருதலைவர்களும் மாலை அங்கு உள்ள அர்ஜுனன் தபசு பகுதியை பார்வையிடுகிறார்கள். மாலை 5.20 மணிக்கு மேல் ஐந்து ரதம் பகுதிக்கு சென்று சுற்றி பார்க்கின்றார்கள். பிறகு கடற்கரை கோவிலுக்கு செல்கின்றனர்.
பிரதமர் மோடியுடன் சேர்ந்து தமிழகத்தை உலுக்க வருகை தரும் சீன அதிபர்


பின்னர் அங்கு ஏற்படுத்தியுள்ள கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகின்றனர். அதன்பிறகு முக்கிய தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை சந்திக்கின்றனர். பின்னர் இரவு 9 மணிக்கு மேல் சீன அதிபர் ஜின்பிங் மாமல்லாபுரத்திலிருந்து கிண்டி திரும்பி நட்சத்திர ஹோட்டலில் ஓய்வெடுக்கிறார்.


இந்நிலையில் சீன அதிபர் தங்கும் நட்சத்திர ஹோட்டலில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். அதில் நைஜீரிய இளைஞர் தலைமறைவாகி விட்டதால் அவரை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
#Mahabalipuram #ChinaPresident #XiJinping #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More