IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சென்னை தடியடி சம்பவத்தை கண்டித்து பல இடங்களில் தொடரும் போராட்டங்கள்

Get real time updates directly on you device, subscribe now.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட ஒன்று என திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகா இஸ்லாமியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் காவல்துறை போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி 120 பேரை விடுதலை செய்தனர்.

இதற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஸ்டாலின் பிப்ரவரி 14-ஆம் தேதி இரவை கருப்பு இரவாக்கிய போலீஸாருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். மேலும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன் அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும். அமைதியான போராட்டத்தை வன்முறை போராட்டமாக சித்தரிக்க காவல்துறை திட்டமிட்டு செயல்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து திருச்சி பாலக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மற்றும் விருதுநகரில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மதுரை, கரூர், தென்காசி, நாகை போன்ற மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#CAA_NRC_Protests #CAA_NRC_NPR

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More