IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..?

Get real time updates directly on you device, subscribe now.


தனியாக நடந்து சென்று கொண்டிருக்கும் அனாதையாக கீழே கிடந்த பணத்தை எடுத்த நபர்கள் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட செய்தது.


சென்னை ஆயிரம் விளக்கு பகுதி சாலையில் நேற்று இரவு அனாதையாக சுமார் 3 லட்சம் ரூபாய் நோட்டுகள் தனியாக கீழே கிடந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த மத்திய கைலாஷ் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த அபினாஷ் என்ற இரு இளைஞர்களும் அந்த வழியாக சென்றுள்ளனர்.


அப்போது கீழே கிடந்த பணத்தை பார்த்த இளைஞர்கள் இருவரும் சுற்றிமுற்றி பார்த்ததில் அருகில் எவரும் இல்லாததால் உடனே அருகிலுள்ள ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


கீழே கிடந்த பணத்தை பிரித்துக்கூட பார்க்காமல், தொலைத்தவர்களின் மனநிலையை எண்ணி உடனே காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்களை காவல்துறையினர் சார்பாக அனைவரும் பாராட்டினர். மேலும் அந்த இளைஞர்களை காவல்துறையினர் சார்பாக கௌரவிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.


பணம் யாருடையது மற்றும் எவரெனும் தொலைத்துவிட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More