IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பசுவின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்

Get real time updates directly on you device, subscribe now.

புல் தின்ன முடியாமல் தவித்து வந்த பசுவிற்கு சென்னை கால்நடை மருத்துவ பல்கலை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது பசுவின் வயிற்றிலிருந்து சுமார் 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டது.

சென்னை திருமுல்லை வாயலை சேர்ந்தவர் முனிரத்தினம். இவர் ஆறு மாதத்திற்கு முன் வேலூரிலிருந்து ஒரு பசு மாட்டை வாங்கி வந்துள்ளார். அந்த பசு 20 நாட்களுக்கு முன்பு தான் ஒரு கன்றை ஈன்றுள்ளது.

தினந்தோறும் 3 லிட்டர் பால் கறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென சில நாட்களாக புல் மற்றும் வைக்கோலை தின்ன முடியாமல் அவதிப்பட்டு வந்தது. பின்னர் சிறுநீர் மற்றும் சாணத்தையும் வெளியேற்ற முடியாமல் திணறியது.

அதன் பின் திருமுல்லை வாயலிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு முனிரத்தினம் தன் பசுவை ஒட்டிச் சென்றார். பசுவை பரிசோதித்த டாக்டர்கள் பசு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் பசுவை வேப்பேரியிலுள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு கொண்டு செல்லுங்கள் என அனுப்பி வைத்தனர்.

டாக்டரின் அறிவுரைப்படி முனிரத்தினம் தன் பசுவை கடந்த அக்டோபர் 18ம் தேதி அன்று வேப்பேரியிலுள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு பசுவுடன் சென்றார். அங்கு மருத்துவர் செல்வராஜ் மற்றும் மேலும் பலர் ஒன்று சேர்ந்து பசுவிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுத்துள்ளனர்.

அதில் பசுவின் வயிற்றில் செரிமானமாகாத பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பசிவிற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென டாக்டர்கள் முனிரத்தினத்திடம் கூறினார்கள். பின்னர் பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்து பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே எடுக்க முடிவெடுத்தனர்.

அறுவை சிகிச்சை காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணியளவில் சிகிச்சை முடிந்தது. பசுவின் வயிற்றிலிருந்து சுமார் 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டது. அத்துடன் பசுவுக்கு ஊசி ஊக்கு உட்பட உடலிலுள்ள முக்கிய உறுப்புகளான இதயம் , கல்லிரல் போன்ற உறுப்புகளை பாதிக்கும் என்பதால் மேலும் இதுபோன்ற ஆபத்தான பொருட்களும் வெளியே எடுக்கப்பட்டன.

அதன்பின் வெல்லம் தவிடு போன்ற இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட மருந்தை பசுவிற்கு கொடுத்து அசை போட வைத்தனர். இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் 35 ஆயிரத்திற்கு மேல் செலவாகி இருக்குமென டாக்டர்கள் கூறினார்கள்.

பசுவின் விலையில் முக்கால்வாசி பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் பசுவிற்கு அரசு கால்நடை மருத்துவமனையில் வெறும் 70 ரூபாயில் பசு காப்பாற்றப்பட்டது.

பிளாஸ்டிக் பயன்படுத்தினால் மண் மற்றும் கால்நடை போன்ற உயிரனங்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் இதுமாதிரியான அளவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது இச்சம்பவத்தின் மூலமாக நாம் அறிய முடிகிறது.

அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த நிலையிலும் மக்கள் முற்றிலுமாக தவிர்த்துவிடுவது மிகவும் அவசியமென டாக்டர்கள் வலியுறுத்தினர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader