IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் ஓட ஓட விரட்டிக்கொலை! சென்னையில் பயங்கரம்

Get real time updates directly on you device, subscribe now.

சென்னை குன்றத்தூரில் 4 மாத வீட்டு வாடகை பாக்கியை கேட்டு வீட்டு உரிமையாளரை, வாடகைக்கு குடியிருந்தவர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் குணசேகரன்(50) ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் குன்றத்தூர் பண்டார தெருவில் சொந்தமாக வீடு கட்டி ஒரு வீட்டில் அவரும் மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் அஜித் (21) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு இருந்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாததால் கடந்த நான்கு மாதமாக அஜித் குடும்பத்தினர் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் நேற்று இரவு அஜித் பெற்றோரிடம் வீட்டு உரிமையாளர் வாடகை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வீட்டிற்கு வந்த அஜித்திடம் பெற்றோர் கூறியதையடுத்து இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனை குத்தியுள்ளார்.

குத்தப்பட்ட குணசேகரன் தன்னை காத்துக்கொள்ள தெருவில் ஓடியுள்ளார் அப்போதும் விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் இறந்து போன குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலையாளி அஜித்தை கைது செய்தனர்.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் குடியிருப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என தமிழக அரசும், நீதிமன்றமும் அறிவித்திருந்த நிலையில் நான்கு மாதமாக தராத வாடகையை கேட்ட வீட்டின் உரிமையாளரை குடியிருப்பவரே ஓட, ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader