IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

போதையில் இருந்த இளம் பெண்ணிடம் ஹோட்டல் ஊழியர் சில்மிஷம்

0 77

கேரளாவிலிருந்து வேலை காரணமாக சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த பெண்ணிடம் ரூம் சர்வீஸ் ஊழியர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அந்த ஹோட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் இந்துமதி(29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அலுவலக வேலையாக கடந்த 22ம் தேதி சென்னை வந்த இந்துமதி, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார்.

நேற்று முன்தினம் இரவு அறையில் இந்துமதி மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஹோட்டல் ரூம் சர்வீஸ் ஊழியரை அழைத்து வேலை வாங்கி உள்ளார். அப்போது ரூமில் இருவரும் மட்டுமே இருந்துள்ள சூழ்நிலையில் ஹோட்டல் ஊழியர் ரூம் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்துவிட்டு போதையில் இருந்த இந்துமதியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போதையில் இருந்த இந்துமதி, ஹோட்டல் ஊழியரின் செயலால் அந்த பெண் அலறியபடி சத்தம் போட்டார். இதனை கேட்டு அருகில் உள்ள அறையில் தங்கியிருந்த நபர்கள் மற்றும் மற்ற ஹோட்டல் ஊழியர்கள் ஓடிவந்து இந்துமதியை அறையில் இருந்த ஊழியரிடமிருந்து மீட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த ஊழியரிடம் ஹோட்டல் நிர்வாகம் விசாரணை செய்தது. இதனால் அந்த நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.