IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

Get real time updates directly on you device, subscribe now.

 

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அருகேயுள்ள ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் புஷ்பவல்லி (47). கணவரை இழந்த இவரது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அருகில் உள்ள கடைக்கு சென்று வருதாக கூறிச்சென்ற அந்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லையாம்.
இதனால் சந்தேகமடைந்த புஷ்பவல்லி தனது வீட்டின் அருகே தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே நள்ளிரவில் அழுது கொண்டே வீடு திரும்பிய மகளிடம் விசாரித்த போது, அவரை அதே பகுதியை சேர்த்த கட்டிட தொழிலாளி செல்வம் (32) கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.

இதையடுத்து புஷ்பவல்லி இது தொடர்பாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வத்தை பிடித்து விசாரித்த போது, அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

#chennai #schoolstudent #Sexual #harassment #worker #arrested

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader