IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சென்னையில் வெடிகுண்டு விபத்து – பிரதரின் வருகைக்கு எதிர்ப்பா ?

Get real time updates directly on you device, subscribe now.

சென்னையின் முக்கிய பகுதியான ரிச்சி சாலையில் நாடு வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் முக்கிய பகுதியும் மக்கள் நடமாட்டம் அதிக கூடும் பகுதியான திருவல்லிக்கேனி ரிச்சி சாலையில் இன்று திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு அனைத்து வகையான எலெக்ட்ரிக் சாதன பொருட்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டு குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையை ஒட்டி ஒருவாரமாக சென்னையில் பலத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றும் மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 22 கடற்கரை கிராமங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி நாளை சென்னை வர இருக்கின்ற சூழ்நிலையில் இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வெடி விபத்திற்கும் நாளை சீன அதிபர் வருகைக்கும் சம்பந்தம் ஏதேனும் உண்டா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Chennai #RitchieStreet #BombBlast #In4Net

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More