IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விஷ ஊசி போட்டு நர்ஸ் தற்கொலை; இதன் பின்னணி என்ன?

0 43

விஷ ஊசி போட்டு நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் நந்தினி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவரது பெற்றோர் அத்திப்பட்டி என்னும் கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நந்தினி திருவொற்றியூரில் சகோதரி சுஜாதாவுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நந்தினி வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சுயநினைவில்லாமல் வீட்டின் படுக்கை அறையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த சகோதரி சுஜாதா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நந்தினி உயிரிழந்தார்.

இதை அறிந்த போலீசார் மருத்துவனனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நந்தினி எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் நந்தினி எழுதியிருந்ததாவது, என்னுடைய மரணத்திற்கு யாரும் காரணமில்லை என எழுதியிருந்ததாக போலீசார் கூறினர்.

மேலும் நந்தினி வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்தி தற்கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


#chennai #Nurse #Suicide