IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இஸ்லாமியர்களுக்காக கதவை திறப்பாரா ரஜினி

Get real time updates directly on you device, subscribe now.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்க்கு ஒரு பக்கம் ஆதரவு மறு பக்கம் எதிர்ப்பு என்ற நிலை நாடு முழுவதும் காணப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது வீட்டின் முன் கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்தார். அப்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பல கருத்துகளை தெரிவித்தார். மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று ரஜினி கூறினார்.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரபேட்டையில் நேற்று இஸ்லாமியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதனால் காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் போராட்டகாரர்கள் 120 பேரை கைது செய்தனர்.

பின்னர் காவல்துறை போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி 120 பேரை விடுதலை செய்தனர். போராட்டம் நடந்து முடிந்த சில நேரங்களில் திமுக எம்.பி ஒருவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக அசம்பாவிதம் நடந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று கூறிய ரஜினி ஏன் வரவில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதற்கு பலர் #வீதிக்குவாங்க_ரஜினி என்று டுவிட் செய்து வருகின்றனர். இது சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

#வீதிக்குவாங்க_ரஜினி #போராடவா_ரஜினி_தாத்தா

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader