IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

களைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு திருவிழா

213


தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து என்ற பெயரில் உணவு திருவிழா ஒன்றை இன்று முதல் செப்டம்பர் 15வரை நடத்து கின்றனர். இதில் தமிழக முதல்வர் பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து கலந்து கொண்டனர்.


தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத் துறையும், நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து வாங்க ரசிக்கலாம் ருசிக்கலாம் என்ற பெயரில் மதராசப்பட்டிணம் விருந்து என்னும் விழாவினை செப்.13 இன்று முதல் செப்.15 வரை நடத்து கின்றனர்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பழனிச்சாமி கூறுகையில், ஒருவர் நோயில்லாதவரே செல்வந்தர் ஆவார். எனவே நோயில்லாமல் வாழ இயற்கை முறையில் கிடைக்கும் நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மாடர்ன் உலகில் நாம் மறந்து கைவிட்ட நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவுமுறைகளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்வுமுறைகளை பின்தொடர உறுதியேற்போம் என்று முதல்வர் கூறினார்.


மேலும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில், உடலுக்கு கேடு விளைவிக்கும் வெளிநாட்டு குளிர்பானங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் இயற்கை பானங்களான இளநீர், மோர் போன்ற பானங்களை அருந்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
#EdappadiPalanisamy #OPanneerSelvam #MadarasappattinamFoodFestival #In4Net