IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மாமன் மகளை கொலை செய்த அத்தை மகன்!

Get real time updates directly on you device, subscribe now.

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த அத்தை மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் வேதவல்லி (வயது 50). இவர் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மூத்த மகன் பாபு (வயது 26), இளைய மகன் மாதவன் ஆகியோர் உள்ளனர்.

வேதவள்ளியின் தம்பி பூபதியும், அவருடைய மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டனர். அதனால் இவர்களுடைய மகள் ஷோபனாவை வேதவள்ளி தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஷோபனாவிற்கு உடல் நிலை சரியில்லாததால் 5-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டனர்.

வேதவள்ளி இளைய மகன் மாதவன், தம்பி மகள் ஷோபனாவுடன் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். வேதவள்ளியின் மூத்த மகன் பாபுவிற்கு திருமணமாகி குடும்பத்துடன் அயனாவரத்தில் வசித்து வருகிறார். ஷோபனாவின் அக்கா மோனிஷாவிற்கு திருமணமாகி சின்னமலையில் கணவருடன் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று காலை வேதவள்ளி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மாதவனும் வெளியே சென்றார். ஷோபனா வீட்டில் தனியாக இருந்துள்ளார். தங்கையை பார்க்க அக்கா மோனிஷா அத்தை வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் வெளியே தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளார்.


வீட்டின் உள்ளே ஷோபனா மயங்கி கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மோனிஷா உடனடியாக அத்தை வேதவள்ளிக்கு தகவல் கொடுத்துள்ளார். வேதவள்ளி பதறி அடித்து வீட்டுக்க வந்து ஷோபனாவை பார்த்த போது, அவர் உடலில் பல இடங்களில் கத்தி குத்து இருந்ததை கண்டு திடுக்கிட்டு போயினர்.

ஷோபனாவை உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஷோபனா இறந்து சில மணி நேரங்கள் ஆனதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஷோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


பின்னர் இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர். பல கோணங்களில் விசாரனை செய்து வந்தனர். வேதவள்ளியின் மூத்த மகன் பாபு வேதவள்ளி இருக்கும் வீட்டை தன் பெயரில் எழுதி வைக்குமாறு பல முறை கேட்டு தகராறு செய்துள்ளான். வேதவள்ளி முடியாது ஷோபனா இருப்பதால் வீட்டை யாருக்கும் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி வேதவள்ளி ஷோபனா மீது தான் அதிக பாசமாக இருந்துள்ளார். இந்த காரணங்களால் ஆத்திரம் அடைந்த வேதவள்ளியின் மூத்த மகன் பாபு தான் ஷோபனாவை கொலை செய்தது தெரிய வந்தது.

இது குறித்து ஆதாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி பாபுவை தேடி வருகின்றனர். மேலும் ஷோபனா வீட்டில் தனியாக இடுக்கும் போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader