IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு!

5


இந்தியாவில் லாபம் குறைவாக அதிக மக்கள் தொகையினர் பயன்படுத்தும் ரயில்வே துறையில் சிறந்து விளங்கும் ரயில் நிலையமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வும் ரயில் வண்டிகள் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்தும், வடஇந்தியா செல்லும் வண்டிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தென்னிந்தியாவில் சிறந்த ரயில் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


ரயில் நிலையங்களில் செயல்படும் சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு, ரயில்கள் இயக்கம், டிக்கெட் முன்பதிவு, பயணிகளுக்கான இருக்கை வசதிகள், காத்திருப்போர் அறைகள், பார்சல்கள் கையாளுதல் மற்றும் ரயில் நிலைய பராமரிப்பு ஆகியவற்றில் தென்னிந்தியாவிலேயே சிறந்து விளங்கும் ரயில் நிலையமாக சென்னை எழும்பூர் ரயில்நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பின் ஐஓஎஸ் தரச்சான்று (ISO 14001:2015) விருது பெற்றுள்ளதாக தென்னக இரயில்வே நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.