IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

6 வயது குழந்தையை 3வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த சித்தி கொடூரம்

49

சென்னையில் 3வது மாடியிலிருந்து ஆறுவயது குழந்தையை தள்ளிவிட்டு கொன்ற சித்தியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தாம்பரம் செம்பாக்கம் சக்கரபாணி தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முதல் திருமணத்தில் ராகவி என்ற ஆறு வயது பெண் குழந்தை உள்ளது. இவரது முதல் மனைவி மூன்று வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் சூர்யகலா என்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சூர்யகலாவிற்கு பார்த்திபனுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சூர்யகலாவிற்கு திருமணம் ஆனது முதல் ராகவி மீது கோபமும் வெறுப்பும் இருந்துள்ளது. இந்நிலையில் சூர்யகலா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் மூன்றாவதாக குழந்தை வேண்டாம் என பார்த்திபன் கூறியிருக்கிறார். இருப்பினும் சூர்யகலா கேட்கவில்லை. இதனால் ராகவி மீது மேலும் வெறுப்பு அதிகமானது.
கணவரே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து பார்த்திபனின் தாய் வெளியூர் சென்றிருந்த நிலையில் ராகவி சூர்யகலா மட்டும் வீட்டில் இருந்தனர். மதியம் முதல் சிறுமி ராகவியை 2 மணிநேரமாக காணவில்லை என்றும் அவளை தேடிவருவதாக பார்த்திபனுக்கு தகவளித்தார். இதனயைறிந்து பார்த்திபன் வீடு திரும்பி மகளை அப்பகுதி முழுவதும் தேடி வந்தனர்.

அப்போது வீட்டின் 3வது மாடியில் இருந்து பார்த்தபோது வீட்டின் பின்புறம் புதருக்குள் சிறுமி சடலமாக கிடப்பதை பார்த்து பார்த்திபன் அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். சிறுமி மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்திருக்கலாம் என சூர்யகலா தெரிவித்தார். ஆனால் மாடியில் இருந்து குழந்தை தானாக கீழே விழ வாய்ப்பில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து சூர்யகலாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையை தொடர்ந்ததில் சிறுமியை அவர்தான் கொலை செய்தார் என தெரியவந்தது. சிறுமி ராகவி மீதான வெறுப்பில் தனியாக இருந்த ராகவியின் தலையில் டைல்ஸ் கல்லை வைத்து ஓங்கி அடித்தேன்.
நீட் மோசடி: இர்பானை மொரிஷியஸிலிருந்து எவ்வாறு சேலத்திற்கு அழைத்து வரப்பட்டது ?

அதில் ராகவி மயங்கி விழுந்தாள். மயக்கமடைந்ததும் அவளை தூக்கிச் சென்று மூன்றாவது மாடியில் இருந்து வீட்டின் பின்புறம் உள்ளே புதரில் வீசியதாகவும் சூர்யகலா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதனையடுத்து சூர்யகலாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Chennai #ChildIncident #MotherArrest #In4Net