12.1 C
Munich
Monday, October 3, 2022

நாயுடன் வாழும் சிறுத்தைப்புலி

Must read

 

அமேரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் லேப்ரேடர் ரக நாயும் சிறுத்தையும் 2ஆண்டுகளுக்கும் மேலாக நட்புடன் பழகி வருகிறது. நாய் ’பொவ்வி’ யுடன், சிறுத்தை ‘நந்தி’ யும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வசித்து வருகிறது. இவை ஒன்றுக்கொன்று அன்பாக பழகி வரும் காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இருவரும் பிறந்த 2 வாரங்களிலேயே நண்பர்களாக மாறி விட்டனர். சிறுத்தைப் புலிகள் இயற்கையிலேயே கூச்ச சுபாவம் கொண்டவையாக இருக்கும். அதனால் நாயுடன் அவை இருக்கும்போது தன்னம்பிக்கை அதிகம் இருப்பதாக சிறுத்தைகள் உணர்கின்றன என்பதால் இரண்டையும் சேர்த்தே பூங்கா ஊழியர்கள் வளர்க்கின்றனர்.

நாளடைவில் இரண்டும் மிகவும் நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். பின்னர் இரண்டுபேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கிவிட்டனர். சில நேரங்களில் சண்டையும் போடுகின்றனர். இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

#Cheetah #living #dog

 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article