IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொடுக்காத வெப்சைட் மீது வழக்கு தொடுத்த தந்தை!

0 19

சண்டிகரைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் மகளுக்கு சரியான மாப்பிள்ளை பார்த்து தர முடியாத மேட்ரிமோனி மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த இணையதளத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சண்டிகரைச் சேர்ந்தவர் டாக்டர் சுரேந்திர பால் சிங். இவருக்கு திருமண வயதில் ஒரு மகள் இருக்கிறார். சுரேந்திர பால் சிங் கடந்த 2017ம் ஆண்டு முதல் தனது மகளுக்கு டாக்டர் மாப்பிள்ளை வேண்டும் என்பதற்காக மேட்ரிமோனி இணையதளம் ஒன்றில் பதிவு செய்திருந்தார்.

அதற்காக அந்த இணையதளத்தில் ராயல் பேக்கேஜ் உறுப்பினராக ரூ.50000 கட்டணம் செலுத்தி உறுப்பினரானார். அந்த இணையதளம் 9 மாதங்களில் 18க்கும் அதிகமான மாப்பிள்ளை வரன்களை அனுப்பியும் சுரேந்திர சிங் பாலின் மகளுக்கு பொருத்தமான வரன் எதுவும் அமையவில்லை.

இந்நிலையில் நீண்ட காலம் காத்திருந்தும் தன் மகள் திருமணத்திற்கு தேவையான மாப்பிள்ளை அமைத்து தரவில்லை என்று கூறி அந்த இணையதளத்தின் மீது சுரேந்திர சிங் நுகர்வோர் அமைப்பிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த மேட்ரிமோனி இணையதளத்திற்கு ரூ.62 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.