IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஊரடங்கிற்கு பிறகு தொழில்துறை நிறுவனங்கள் சந்திக்க வேண்டிய சவால்கள்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பிறகு தொழில்துறை சந்திக்க இருக்கும் சவால்கள் குறித்த சீர்திருத்த அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

நிலம், தொழிலாளர், பண கையிருப்பு, சட்டம் உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இக்கட்டான சூழலாக இருந்தாலும், இது ஒரு நல்ல வாய்ப்பு என பிரதமர் கூறி இருக்கிறார்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், கல்வி மற்றும் சுகாதாரம், வணிகம். பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசுகள், எளிமையாக தொழில் துவங்குவது மற்றும் நிறுவன சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட 7 அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள் வாங்க 15000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் 300 நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன,

மருத்துவ பணியாளர்களுக்கு இதுவரை 51 லட்சம் பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளது. 4113 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய 7 அறிவிப்புகளில் 5 அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கானது. இதுவரை 87 லட்சம் N95 முகக் கவசங்களும், 11 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader