IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆன்லைனில் 2021 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா

Get real time updates directly on you device, subscribe now.

2021 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா ஆன்லைனில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையில் மிகவும் பிரபல நிகழ்வுகளில் ஒன்றான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா 2021 ஆம் ஆண்டு ஆன்லைனில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கேரி ஷேபிரோ வீடியோ காணொலியில் தெரிவித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரும் தொழில்நுட்ப விழாவாக சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா அமைந்தது.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதே வரிசையில் பல்வேறு மிக முக்கிய தொழில்நுட்ப நிகழ்வுகள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader