12.1 C
Munich
Monday, October 3, 2022

வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் உடன் மதுரை சிஇஓஏ பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Must read

மதுரை கொசக்குளம் சிஇஓஏ மெட்ரிக் உயர் நிலைப் பள்ளியில் வணிகவியல் பயிலும் மாணவர்கள் சிஏ அடிப்படைக் கல்விக்குத் தயாராகும் நோக்கில், அப்பள்ளியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ்  லிமிடெட். வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான வெராண்டா சிஏ மையத்தில், சிஏ தேர்வுகளுக்குத் தயாராக உதவும் வகையில் 360 டிகிரி கோணத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய பயிற்சியை அம்மாணவர்கள் பெறுவார்கள்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக ஆன்லைனிலும், நேரடியாகவும் மற்றும் இவை இரண்டும் கலந்த வடிவத்திலும் மாணவர்களுக்கும் இதர சிஏ தேர்வர்களுக்கும் ஒருங்கிணைந்த, பன்முகத்தன்மை வாய்ந்த கற்றல் தீர்வுகளை மேம்படுத்தி வழங்க உத்தேசித்துள்ளது வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ். பள்ளிகள் வாயிலாகவும் வீட்டில் இருந்தவாறும் இருவேறு முறைகளின் வழியே சிஏ கற்கத் தயாராகுபவர்களுக்கு உதவும் நோக்கில் இது அமையும். இத்துறையில் நிபுணத்துவமிக்க அறிஞர்களால் உருவாக்கப்படும் ஆழமான பாடங்களை, வெராண்டா சிஏவின் ஐசிபி ஆனது 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு வணிகவியல் மாணவர்களுக்கு வழங்கும்.

இது பற்றி வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ்  நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் & தலைவர் கல்பாத்தி எஸ்.சுரேஷ் கூறுகையில், “ஐசிஏஐயின் கடுமையான கட்டுப்பாடுகளால், தேர்வர்கள் சிஏ தேர்வுகளில் வெற்றி பெறுவது மிகக்கடினமானதாகி விட்டது. நாட்டின் மிகக்கடினமான தேர்வுகளில் ஒன்றில் விண்ணப்பதாரர்கள் வெற்றி பெறுவதற்கு உதவும் வகையில், வெராண்டா சிஏ மூலம் மிகச்சிறந்த பயிற்சியை வழங்க முயற்சிக்கிறோம். மாணவர்களின் வழியிலேயே சென்று அவர்களுக்கு உதவும் வகையில் மிகச்சிறந்த ஆசிரியர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்துள்ளோம்; மாணவர்கள் சிறப்பாகத் தேர்வுக்குத் தயாராவதை ஊக்குவிக்கும் நோக்கில் தயாராகுதல் செயல்முறையை முடிந்தளவிற்கு எளிமைப்படுத்தியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

சிஇஓஏ மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கௌரி கூறுகையில், ” வெராண்டா சிஏ உடன் இணைந்து வழங்கவுள்ள ஒருங்கிணைந்த வணிகவியல் திட்டம் மிகவும் மேம்பட்டது; யோசனை செய்வதற்குரிய மிகக்குறுகிய காலத்தில் நேர மேலாண்மைத் திறன்கள் மற்றும் துல்லியத்துடன் மாணவர்களைச் சவாலுக்கு உள்ளாக்கும் தினசரித் தேர்வுகளைக் கொண்டது. சிஏ  தேர்வுக்கு தயாராவதற்கான அறிவை ஆழப்படுத்த இந்த கேள்வி நேரம் உதவிகரமாக இருக்கும்; வகுப்புகளுக்கான அட்டவணை நிறைந்திருப்பதால் குறித்த நேரத்தில் பெரும்பாலான பாடங்களை அறிந்துகொள்ள உதவும்” என்று தெரிவித்தார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article