IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சீன முகவரி பார்சலில் ஆபத்தான மர்ம விதைகள் : எச்சரிக்கும் மத்திய அரசு

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் பல்லுயிர்தன்மைக்கு அச்சுறுத்தலாக அனுப்பப்படும் மர்ம விதை பார்சல் விவகாரத்தில், மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா, கனடா போன்ற பல்வேறு நாடுகளில் கடந்த சில வாரங்களாக, சீனாவில் இருந்து அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்ட மர்ம பார்சலில் விதைகள் மட்டும் இடம்பெற்று இருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

அதில், கடந்த சில மாதங்களாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான பார்சல்களில் மர்ம விதைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இத்தகைய பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த விதைகளில் ஏதேனும் ஆபத்துகள் இருக்கலாம். புதுவகையான நோயை பரப்பக்கூடிய வாய்ப்புண்டு. இது சுற்றுச்சூழலுக்கும், விவசாய சூழலியல் மண்டலத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கூட மாறலாம் என்று அமெரிக்க வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், அந்த மர்ம விதைகள் விவசாயத்தை அழிக்கும் அங்கீகரிக்கப்படாத உயிரி ஆயுதமாகக் கூட இருக்கலாம் என, அமெரிக்காவின் வேளாண் துறை எச்சரித்து இருப்பதை குறிப்பிட்டு மத்திய வேளாண் அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே, மாநில அரசுகள், இந்திய வேளான் கவுன்சில், வேளாண் பல்கலைக்கழகங்கள் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader