IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பதஞ்சலி உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை நோட்டீஸ்

23


பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பாக அமேசான், பிளிப்கார்ட் , பதஞ்சலி உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது


பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி , உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்கள் , அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும். நிறுவனங்களோ அல்லது இடைத்தரகு நிறுவனங்கள் மூலமோ அந்த பிளாஸ்டிக்கை சேகரித்து மறு சுழற்சி செய்ய வேண்டும்.

Related Posts
1 of 1,176


இதை மேற்கொள்ள தவறியதாகக் கூறி அமேசான், பிளிப்கார்ட், டானோன், பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


திட்ட அறிக்கையை கால அளவீட்டுடன் தர தவறும் பட்சத்தில் அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.