IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வரலாற்று சின்னங்கள் திறப்பது குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு தழுவிய ஊரடங்கு ஆறாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 605220ஆக உயர்ந்துள்ளது. மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 17848ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டு வருகிறது.

நாடு முழுவதும் வரலாற்று சின்னங்களை திறப்பது தொடர்பாக மத்திய அரசு தற்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்களை வருகின்ற ஜுலை 6ம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜுலை 6ம் தேதி முதல் உரிய கொரோனா தடுப்பு முறையை பின்பற்றி திறக்குமாறு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader