IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மக்கள் நலன் கருதி ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்..?

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதிக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு முடிவுக்கு வந்தால் மேலும் நோய்த் தொற்று அதிகமாகி மேலும் பரவும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

முன்னதாக, கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு, ஊரடங்கை நீட்டிப்பதற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader