பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கும் – அமைச்சர் பாண்டியராஜன்

Get real time updates directly on you device, subscribe now.

பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக் கூடியது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும் 7 வகையான சித்த மருத்துவ மருந்துகளை கொரோனா தடுப்பு சிகிச்சைக்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அலோபதி மருந்துகளை விட சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா மருந்துகள் நல்ல பலனை தருவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மருந்துகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கிகாரம் கொடுப்பதில் இந்திய மருத்துவ கவுன்சில் பாரபட்சம் காட்டி வருகிறது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றமும் கடுமையாக சாடியிருந்தது.

இந்தநிலையில், கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவ மருந்துகள் ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தருப்புக்கு பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக்கூடியது. தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனை நிரூபிக்க உயர்நீதிமன்றம் அரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது. மேலும் தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader