IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பஞ்சரிலும் பாதுகாப்பான பயணத்திற்கு உறுதி அளிக்கும் சியட் பஞ்சர் சேப் டயர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் டயர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் சியட் நிறுவனம் பஞ்சர் ஆனாலும் பாதுகாப்பு அளிக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கான ‘பஞ்சர் சேப்’ என்னும் புதிய டயர்களை சேலத்தில் அறிமுகம் செய்தது. டியூப் இல்லாத புதிய டயர்கள் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோட்டார் சைக்கிள்கள் பஞ்சர் ஆனாலும் எந்தவித தொந்தரவும் இல்லாமல் மற்றும் பாதுகாப்பாக ஓட்டிச் செல்லலாம். இந்த டயர்கள் தென்னிந்தியாவில் தற்போது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் சேலம், கேரளா, பெங்களூர், மைசூர் மற்றும் கர்நாடகாவில் பல பகுதிகளில் கிடைக்கும்.

பஞ்சர் சேப் டயர்கள், மோட்டார் சைக்கிள் பஞ்சராகும் போது அந்த ஓட்டை வழியாக காற்று வெளியேறாத வண்ணம் உள்ளே உள்ள மெழுகு போன்ற திரவம் அந்த ஓட்டையை வந்து அடைக்கிறது. இதன் காரணமாக நாம் வண்டியை ஓட்டிச் செல்லலாம். இது இந்தியாவில் சியட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட காப்புரிமை பெற்ற சீலன்ட் என்னும் ஒட்டும் திரவம் போன்ற மெழுகுவர்த்தி மூலம் சாத்தியமாகிறது.

இந்த டயர் பிரத்யேகமான பெட்டியில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.அது 2.5 மி.மீ. விட்டம் உள்ள ஓட்டையை அடைக்கும் திறன் கொண்டது. இந்த டயர்கள் மிகவும் பாதுகாப்பான, தனித்துவமான மற்றும் செயல்திறன் கொண்டவை ஆகும், அவை மோட்டார் சைக்கிள் சவாரியின் பாதுகாப்பை மேம்படுத்தும். பஞ்சர் ஆவதால் ஏற்படும் விபத்துக்கள் இல்லாமல் தவிர்க்கும். புகழ் பெற்ற மோட்டார் சைக்கிள்களுக்கு ஏற்ற வகையில் சியட்டின் ‘பஞ்சர் சேப்’ டயர்கள் 7 விதமான அளவுகளில் வெளிவந்துள்ளன.

இது குறித்து பேசிய தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அமித் டோலானி கூறுகையில், நுகர்வோரின் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்தும் வகையில், எந்த மோட்டார் சைக்கிள் சவாரிக்கும் பொதுவான சிக்கலை சமாளிக்கும் நோக்கத்துடன் சியட்டின் ‘பஞ்சர் சேப்’ டயர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த டயர்கள் ஏராளமான வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். இந்த டயர்களின் சிறப்பு அம்சமானது, அவை பஞ்சர் ஆனால், தானாகவே சரி செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader