IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சிபிஐ இயக்குனர் விவகாரம் தொடர்பில் சிபிஐ அலுவலகம் முற்றுகை ராகுல் காந்தி கைது.!!

Get real time updates directly on you device, subscribe now.

சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதலை தொடர்ந்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஸ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

 

இதனைக் கண்டித்தும், சிபிஐ அமைப்பை மத்திய அரசு வளைக்கப் பார்ப்பதாக குற்றம்சாட்டி, ராகுல்காந்தி தலைமையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.

 

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில், இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஸ் அஸ்தனா இடையே ஏற்பட்ட மோதலுக்கு, பிரதமர் மோடியே காரணம் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

 

பிரதமர் மோடிக்கு பிரியமான ராகேஸ் அஸ்தனா, சிபிஐ-யில் இரண்டாம் நிலை பொறுப்புக்கு ஊடுருவியவர் என்றும், அவர் மீது லஞ்ச வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ட்விட்டர் பதிவில் ராகுல்காந்தி தெரிவித்திருந்தார்.

 

இதைத் தொடர்ந்தே அலோக் வர்மாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாகவும், ரஃபேல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறாமல் தடுக்கும் வகையில், தலைமைப் பொறுப்பில் இருந்து அலோக் வர்மாவை நீக்குவதற்கு முயற்சி நடைபெறுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

 

இதைக் கண்டித்தும், சிபிஐ அமைப்பின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட்டு வருவதாக தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று போராட்டங்களை அறிவித்திருந்தது.

 

இதன் ஒருபகுதியாக, டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் இன்று நடைபெற்ற பேரணியில், காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் திரளாகப் பங்கேற்றிருந்தனர்.

 

டெல்லியில் தயால் சிங் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணி சிபிஐ தலைமையகத்தில் முடிவடைந்தது.

 

பின்னர் சிபிஐ தலைமையகத்தின் முன்பாக, ராகுல்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டதுடன், பேரணியின் முடிவில் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

இதையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்டோரை பொலீசார் கைது செய்திருந்தனர்.

 

மேலும், போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்த சிலர் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றப்பட்டமையால் அந்தப் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More