IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காலிஃபிளவர் சட்னி

140


காலிஃபிளவர் – 1/2 கிலோ, சோம்பு – 1 டீஸ்பூன், தேங்காய் – 1/2 மூடி (சிறியது), ஏலக்காய் – 1, இஞ்சி – 1 சிறிய துண்டு, மிளகாய் வற்றல் – 6, பூண்டு – 5 பல், எண்ணெய் – 1 குழிக்கரண்டி, கிராம்பு – 1, கசகசா – 1 மேஜைக்கரண்டி, பட்டை – 1, சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 1, முந்திரிப்பருப்பு – 10, குடைமிளகாய் – 1 (சிறியது), உப்பு – தேவையான அளவு.


இப்படித்தான் செய்யணும்:

  • காலிப்பிளவர், குடைமிளகாய் ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, ஏலம், சோம்பு, கிராம்பு, பட்டை மிளகாய் வற்றல், கசகசா, தேங்காய் எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கிய பின் குடைமிளகாய், காலிஃபிளவரை வதக்கி அரைத்த மசாலை ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்து வெந்தபின் இறக்கவும்.
  • சுவையான காலிஃபிளவர் சட்னி தயார்.
  • சப்பாத்தி இட்லிக்குத் தொட்டு சாப்பிடலாம். தேங்காயை பால் எடுத்தும் ஊற்றலாம்.

#Cauliflower #chutney