IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

World

பனாமா ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்த பெண் பத்திரிகையாளர் குண்டு வெடிப்பில் பலி !!

தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டா. பனாமா ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்தவர்களில் முக்கிய நபராகக் கருதப்படும் மால்டா நாட்டைச் சேர்ந்த பெண் நிருபர் தப்னே கருவானா கலிஜியா கார் குண்டு வெடித்துப் பலியானார். பனாமா நாட்டில் உள்ள புகழ் பெற்ற ‘மொசாக் பொன்சேகா’ சட்ட நிறுவனத்தின் உதவியுடன் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். மேலும் இதற்குரிய ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இதில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், மால்டா…

சோமாலியாவில் இரட்டை குண்டு வெடிப்பு ; பலி எண்ணிக்கை 260 ஆனது !!

ஆப்பிரிக்க நாடான சோமாலியா தலைநகர் மோகாதிஷுவில் பிரபல விடுதிக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260 -ஆக அதிகரித்துள்ளது. இந்தக் குண்டு வெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், நேற்று முன்தினம் இரவு, ஒரு டிரக் புகுந்தது.அதிலிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், அங்கிருந்த ஒரு ஓட்டல்கள், சந்தைகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் ஒரே நொடியில் இடிந்து விழுந்தன. மேலும் குண்டு வெடிப்பினால்,அங்கிருந்த கடைகளிலும்…

பிலிப்பைன்சில் சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்தது ; 11 இந்தியர்களை காணவில்லை !!

ஹாங்காங் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் நேற்று அதிகாலை மூழ்கியது. இதில் 26 இந்தியர்கள் பணியாற்றினர். இதன் மூலம் பணியாற்றிய 15 இந்தியர்களை ஜப்பானிய கடலோர காவல் படையினர் மீட்டனர். அதே கப்பலில் பணியாற்றிய 11 இந்தியர்களைக் காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. கடலில் திடீரென சூறாவளி காற்று வீசியதில், கப்பல் சேதமடைந்து மூழ்கியது. இது குறித்து ஜப்பான் கடற்படைக்கு தகவல் தெரியவந்ததும், மீட்பு பணிக்காக 2 ஜப்பானிய கப்பல்கள்…

பட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வு முடிவுகள்… இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா ?

வாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் உலக உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் பட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வை நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் 119 வளரும் நாடுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன் பட்டினியில்லா நாடுகள் மற்றும் சிறந்த வளரும் நாடுகள் என பெருமையைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 97-வது இடம் வகித்தது. வடகொரியா, வங்காளதேசம், ஈராக் ஆகிய நாடுகள் இந்தியாவை விட இந்த பட்டியலில்…

யுனெஸ்கோவில் இருந்து விலகுவதாக அமெரிக்கா, இஸ்ரேல் அறிவிப்பு !!

ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. யுனெஸ்கோ செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தது. இதனால் அமெரிக்கா எந்த நேரத்திலும் யுனெஸ்கோவில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலகல் டிசம்பர் 2018 இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை யுனெஸ்கோவில் அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மறுபரிசீலனை…

ஸ்மார்ட் போனில் 'மொபைல் கேம்' விளையாடி கண் பார்வையை இழந்த சீன பெண் !!

சீனாவில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண் பார்வை பறிபோனது. கிழக்கு ஆசிய நாடான, சீனாவின், ஷாங்ஜி மாகாணத்தைச் சேர்ந்த, 24 வயது பெண்ணுக்கு, மொபைல் போன் விளையாட்டுகள் மீது அதிக ஆர்வம். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அவர் தொடர்ச்சியாக செல்போனில் கேம் விளையாடியதாக கூறியுள்ளார். வார இறுதி நாட்களில் விடுமுறையின் போது பல மணி நேரம் தொடர்ச்சியாக கேம் விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்து உள்ளார். “விடுமுறை நாட்களில் வேலை இல்லையென்றால் நான் காலை 6 மணிக்கு எழுந்து கேம்…

சுட்டுக் கொன்றதாக கூறப்பட்ட முன்னாள் காதலிக்கு அதிகாரமிக்க பதவி கொடுத்த வட கொரிய அதிபர் !!

வடகொரியாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் ஹயோன் சாங் வோல் . இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பாலியல் வீடியோ ஒன்றை தயார் செய்தார் என்ற குற்றத்திற்காக ஹையோனை சுட்டுக்கொல்ல கிம் ஜாங் உன் ஆணையிட்டு, அது நிறைவேற்றப்பட்டதாக ஒரு செய்தி இணையத்தில் அப்போது வலம் வந்தது. வட கொரியா என்பது ஒரு இரும்புத்திரை போட்ட நாடு என்பதால் அங்கு நடைபெறும் நிகழ்வுகள் வெளி உலகிற்கு முழுமையாக தெரிவதில்லை. எனவே வதந்திகள் றெக்கை கட்டி பறப்பது வழக்கம். ஆனால் ஓராண்டு கடந்த நிலையில் அவர் தேசிய தொலைக்கட்சியில் தோன்றி, ஜனாதிபதி கிம் ஜோங் வுன் கலைத்துறைக்கு…

2000 ரூபாய் நோட்டு டிசைனில் புது வித அழைப்பிதழ்… கர்நாடக பாஜக எம்.எல்.ஏ வின் அன்பு பற்று !!

பா.ஜ.க.வினர் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். முகநூல், டுவிட்டர் பக்கத்தில் பா.ஜ.க புகழ் பரப்பும் வேலைகளை அவர்கள் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் செய்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. சதீஷ் ரெட்டி தன்னுடைய பொம்மனஹள்ளி தொகுதிக்கான 175வது வார்டில் பேட்மிட்டண் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஓபன் ஹால் திறப்பு விழாவிற்கு  2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் அழைப்பிதழில் அச்சடித்து தன்னுடைய அன்பை  வெளிக்காட்டியுள்ளார். 2000 ரூபாய்…

கண்களுக்குள் பச்சை குத்தி கொண்டு ஓவர் நைட்டில் ட்ரெண்ட் ஆன டெல்லி இளைஞர் !!

டெல்லியைச் சேர்ந்த கரண் (28) என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்தி கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. தன்னுடைய பதினாறு வயதில் உடல் முழுவதும் பச்சைக் குத்தியதை அடுத்து வேறு எங்கும் பச்சைக் குத்த இடம் இல்லாமல் இவர் தன்னுடைய கண்களில் பச்சைக் குத்த முடிவு எடுத்துள்ளார். இவர் தற்போது கண்களுக்குள்ளும் பச்சைக் குத்தி இருக்கிறார். மிகவும் சிக்கலான இந்த பச்சைக் குத்தும் முறையை அமெரிக்காவில் செய்து விட்டு வெற்றிகரமாக இந்தியா திரும்பி இருக்கிறார். இவர் கண்களில் பச்சைக் குத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்…

159 மணி நேரம் தொடர்ந்து பணி புரிந்ததால் ஜப்பான் பெண் மரணம் !!

ஜப்பான் நாட்டில் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு பெண் ஓவர்டைமாக தொடர்ந்து 159 மணி நேரம் வேலை பார்த்ததால்   திடீரென மரணம் அடைந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 31 வயது பெண் மிவா சடோ. இவர் ஒரு நாள் கூட விடுமுறையே எடுக்காமல் கடுமையாக உழைக்கும் தொழிலாளியாக இருந்தார். மேலும் ஒரு மாதத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை எடுக்கும் மிவா சடோ சமீபத்தில் ஓவர் டைம் வேலை பார்ப்பதாக கூறி தொடர்ந்து 159 மணி நேரம் பணிபுரிந்தார். இந்நிலையில்  பணியில் இருந்தபோதே திடீரென மயங்கி விழுந்த மிவா சடோ, மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே…