IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

World

குழந்தையை பிரிட்ஜில் வைத்த தாய் !!

பெரு நாட்டைச் சேர்ந்த மோனிகா பலோமினா என்ற பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை குழந்தை பிறந்தது, மேலும் சரியான வளர்ச்சியடையாததால் குழந்தை கடந்த திங்கட் கிழமை இறந்து விட்டது. இறப்பு சான்றிதழ் கொடுத்த பிறகே குழந்தைக்கு இறுதி சடங்குகள் செய்ய முடியும். இந்நிலையில் குழந்தைக்கு இறப்பு சான்றிதழை கொடுக்க வைத்தியசாலை தாமதப்படுத்தியது. மேலும் வைத்தியசாலை பாதுகாவலர் கொடுத்த தொந்தரவினால் குழந்தையின் உடலை மோனிகா தனது வீட்டிற்கு எடுத்து சென்று பிரிட்ஜில் வைத்துள்ளார். அதனால் அவரால் சான்றிதழ் பெற முடியவில்லை. இச்சபாவம் பெரும் பரபரப்பை…

தாயும் – மகளையும் திருமணம் செய்யும் வழக்கம் !!

வங்காள தேசத்தில் உள்ள பழங்குடியினர் மக்கள் ஒரு பாரம்பரியமான வழக்கத்தை பின்பற்றுகின்றனர். அது என்னவென்றால் விதவை பெண்களும் அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று, இந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட ஓரோல டால்போட் (30) என்ற பெண் கூறியதாவது:- நான் எனது தாய் மிட்டமோனி மற்றும் எனது தாயின் இரண்டாவது கணவரும், எனது வளர்ப்பு தந்தையுமான நோட்டன் ஆகிய இருவருடன் சிறு வயதில் இருந்து வசித்து வருகிறேன்.எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார், அவரின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.…

சவுதி அரேபியாவில் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !!

சவுதி அரேபியாவின் ஜெத்தா, மெக்கா, டயிப் உள்ளிட்ட பல நகரங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. கடந்த 2009 ம் ஆண்டிற்கு பிறகு தற்போது ஜெத்தாவில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் ஆறுகளைப் போல் மார்பளவிற்கு நீர் தேங்கி உள்ளது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பின்னர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், ஆறுகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும். மேலும் கனமழை மற்றும் பலத்த சூறைக்காற்று தொடர வாய்ப்புள்ளதால் பல சாலைகளை மூட…

உபேர் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு !!

அமெரிக்காவின் பிரபல கால் டாக்ஸி நிறுவனம் உபேர். 5.7 கோடி உபேர் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. திருடப்பட்ட தகவல்கள் குறித்த மேலதிகாரிகளின் விவரங்கள் தற்போது வெளியாகி வரும் நிலையில் உபேர் வாடிக்கையாளர்களின் மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் முகவரிகள் உள்ளிட்டவையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் உபேர் வாடிக்கையாளர்கள் தகவல் களஞ்சியம் மீதான இந்த தாக்குதல் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்டது எனவும் அந்த நிறுவனத்தினர் இன்று ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர் ஹேக்கர்கள்…

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை சோதனைக்கு சீனா தயார் !!

சீனா அனைத்து துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகிறது. அணுசக்தி துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. சீனா ‘டாங்பெங் - 41’ என்ற ஏவுகணையை தயாரித்து கடந்த 2012-ம் ஆண்டில் முதன் முறையாக சோதனை நடத்தியது. இது 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் சுமந்து சென்று தாக்குதல் நடத்த முடியும். இவை வெவ்வேறு இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டவை. மேலும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை ஏற்கனவே 7 முறை பரிசோதிக்கப்பட்டுள்ளது.…

தேசிய கொடியை விட பா.ஜ.,கட்சி கொடி உயரமாக பறந்தது !!

உ.பி மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் பங்கேற்ற கூட்டம் ஒன்று நடந்தது. கூட்டத்திற்கு முதல்வர் வருவதற்கு முன்னர் மைதானத்தில் இருந்த தேசிய கொடியை விட பா.ஜ., கட்சி கொடி உயரமாக பறந்தது. இதை கண்டு கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது பா.ஜ.க நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு பா.ஜ.க கொடி அகற்றப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை தேசிய கொடியை விட பா.ஜ.,கட்சி கொடி உயரமாக பறந்தது. இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி…

ஆஸி., அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது !!

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நியூ கலேடோனியா அருகே தெற்கு பசிபிக் கடல் பகுதியில் லாயல்டி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் அலைகள் அதிக உயரத்திற்கு செல்லும் அளவை விட கூடுதலாக ஒரு மீட்டர் உயரத்திற்கு சென்றுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஏலியன்களால் மிரண்டுபோன ஜெர்மனி மக்கள் !!

ஜெர்மனியில் திடீரென வானில் ஒளியுடன் பறந்து சென்ற மர்ம பொருள் பந்து போன்று காணப்பட்டனர். பின்னர் அந்த பொருள் முதலில் வெள்ளை நிறத்திலிருந்து பின்னர் பச்சை நிறமாக மாறி இறுதியில் ஊதா நிறத்தில் ஒளிர்ந்து கொண்டே மறைந்துள்ளது. இதை பார்த்த மக்கள் பீதியடைந்துள்ளனர். வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா என்று இது போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு உலக விஞ்ஞானிகள்…

ஈரானில் பயங்கர நிலநடுக்கம் : இந்தியர்களின் கதி என்ன ?

மத்திய கிழக்கு நாடுகளான ஈரான்–ஈராக் நாடுகளின் எல்லையில் ஜக்ரோஸ் மலைப்பிரதேசம் உள்ளது. இதன் பெரும் பகுதி ஈரான் எல்லைக்குள் கெர்மான்ஷா என்ற மாகாணத்துக்குள் இருக்கிறது. ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தின் கிழக்கு நகரான ஹலாப்ஜாவும் இந்த மலைப்பகுதியில் அமைந்த முக்கிய நகராகும். இவை அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் அபாயகர பகுதிகள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று இப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், ஈரானில், 348 பேர் உயிரிழந்தனர் ; 6,603 பேர் காயமடைந்தனர். ஈராக்கில், எட்டு பேர்…

ஊழல் தடுப்பு நடவடிக்கை : சவுதியில் இளவரசர்கள், அமைச்சர்கள் கைது !!

வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில் மன்னராக சல்மான் (வயது 81) உள்ளார். பட்டத்து இளவரசராக அவரது மகன் முகமது பின் சல்மான் (32) இருக்கிறார். இந்நிலையில் சவுதியில் மன்னர் சல்மான், நேற்று முன்தினம் திடீரென தனது மந்திரி சபையில் 2 அதிரடி மாற்றங்களை செய்தார். முதல் மாற்றம், தேசிய பாதுகாப்புத்துறை மந்திரி பதவியில் இருந்து இளவரசர் மிதெப் பின் அப்துல்லா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கலீத் பின் அயாப், தேசிய பாதுகாப்பு துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். பொருளாதார துறை மந்திரி அதெல் பாகீஹ் மாற்றப்பட்டார். அவரது இடத்துக்கு பொருளாதார…