IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

Smart News

அவினாசி விபத்து: லாரி ஓட்டுனர் கைது

19 பேர் பலியான அவினாசி விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் ஹேம்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

பேருந்து மோதி 50 ஆடுகள் பலி

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் முருகன் கோயில் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் சாலையை கடக்க முயன்ற போது காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் 50 ஆடுகள் பலியாகின.

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் கமல், சங்கருக்கு சம்மன்

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள். இது தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கருக்கு பூவிருந்தவல்லி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்

இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: மழையால் பாதிப்பு

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது. முதலில் ஆடி வரும் இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்த நிலையில், மழையால் ஆட்டம்…

அசாதுதீன் ஓவைசி எம்.பி. மீது வழக்கு

வாணியம்பாடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அசாதுதீன் ஓவைசி எம்.பி. மற்றும் திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இன்றி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாக மேலும் 15 பேர் மீது…

மதுரை: கெரோனா அறிகுறியுடன் இருவர் அனுமதி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கெரோனா வைரஸ் அறிகுறியுடன் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெரோனா வார்டில் வைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இன்றி உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.68 ஆகவும், டீசல் ரூ.68.27 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகிறது.

மகளிர் டி.20 உலக கோப்பை கிரிக்கெட்: இன்று துவக்கம்

ஐ.சி.சி. சார்பில் மகளிர் டி.20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் மோதுகின்றன. போட்டிகள் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

ஈஷா யோகா மையத்தில் இன்று சிவராத்திரி விழா

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கய்யநாயுடு கலந்து கொள்கிறார்

முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 28 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 79 ரன்களை எடுத்து…