IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பண மதிப்பிழப்பு : பா.ஜ.வை சாடிய ராகுல்

0 20

கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். இவ்வறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், இது குறித்து இன்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மதிப்பிழப்பு என்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகி விட்டது என்று பா.ஜ.வை சாடியுள்ளார்.