IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

காட்மேன் வெப்சீரிஸ் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு

Get real time updates directly on you device, subscribe now.

சர்ச்சைக்குரிய காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக அதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது வழப்பு பதிவு செய்ததோடு, நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்தின் இயக்குனர் யோகேஸ்வரன் இயக்கிய காட்மேன் என்ற வெப்சீரிஸில் ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி மற்றும் சோனியா காந்தி நடித்துள்ளனர். இதை ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தனர். இதன் டீசர் கடந்த வாரம் வெளியானது. அதில் கடவுள் நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும், குறிப்பிட்ட பிராமணர் சமுதாயத்தை இழிவுபடுத்திய வசனங்களும் ஆபாச காட்சிகளும் நிறைந்தது சர்ச்சையானது.

இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. சென்னை, மதுரை போன்ற நகரங்களில் போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும். வெப்சீரிஸ்களுக்கு சென்சார் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து அந்த டீசரை நீக்கினர்.

இந்நிலையில் இந்த வெப்சீரிஸ் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார் காட்மேன் தொடரின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader