IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த மாநகராட்சி உதவிப் பொறியாளர் மீது வழக்கு

Get real time updates directly on you device, subscribe now.

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலரான கல்லூரி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த, மாநகராட்சி உதவி பொறியாளர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரம் மண்டலம் மண்ணடியில் வீடு வீடாகச் சென்று நோய் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவிக்கு, மாநகராட்சி உதவி பொறியாளர் கமலகண்ணன் காதல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே கமலகண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது பாலியல் தொந்தரவு, பெண் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader