IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

செரிமாணக் கோளாறை குணமாக்கும் ஏலக்காய்!

Get real time updates directly on you device, subscribe now.


ஏலக்காய் பற்றி எல்லோருக்கும் நிச்சயம் தெரியும். அதை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. ஏலக்காய் முக்கியமாக சமையலில் வாசனை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டும் அல்லாது இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. நாம் தினமும் குடிக்கும் டீயில் ஏலக்காய் பொடியை சிறிதளவு கலந்து குடித்தால் மிகவும் அருமையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.


கேசரி, பாயாசம், ஸ்பெஷல் டீ என அனைத்திலும் வாசனைக்காக ஏலக்காயைச் சேர்க்கிறோம். ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ, பி, சி அடங்கியுள்ளன. பல மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய்களை தொடர்ந்து சாப்பிடுவதால் விளைகின்ற நன்மைகள் என்ன எனபதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

இதயம்:


இதயப் பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பது நல்லது. தினந்தோறும் இதனைக் குடித்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.


தலைவலி:


தலைவலி உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிக்கலாம் அல்லது ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.

இத்துனூண்டு பூண்டுக்குள்ளே இத்தனை நன்மைகளா?!


வாயில் துர்நாற்றம்:


ஏலக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் உள்ளது. அதனால் வாயில் துர்நாற்றம் உள்ளோர் ஒரு ஏலக்காய்யை மென்று சாப்பிட்டால் இதன் மனம் துர்நாற்றத்தைப் போக்கிவிடும். மேலும் இதனால் சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்.


செரிமாணம்:


செரிமாணப் பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பதன் மூலம் விரைவில் செரிமாணமாகும்.


புற்று நோய்:


புற்று நோய்களில் பல வகைகள் உள்ளது. இக்காலத்தில் பலரையும் ஏதாவது ஒரு வகையான புற்று நோய் பாதிக்கிறது. புற்று நோய்க்கான சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை சாப்பிட்டு வருபவர்கள், ஏலக்காய்களையும் சரியான அளவில் சாப்பிடுவது நல்லது. ஏலக்காய்களில் இருக்கும் பிசபோலீன் எனப்படும் வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

வலிப்பு:


வலிப்பு நோய் ஒரு சிலருக்கு பிறக்கும் போதே மூளை மற்றும் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் ஏற்படும் ஒரு நோய் ஆகும். இந்த நோய் உள்ளவர்கள் உணவில் ஏலக்காயை சேர்த்து வருவது நல்லது.

எப்பேர்பட்ட சிறுநீர் கல்லையும் கரைக்க அற்புத மருந்து நாவல் பழம்!


நோய் எதிர்ப்புச் சக்தி:


நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு ஏலக்காய் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.


பசியின்மை:


சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள் ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். மேலும் ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

ச‌ளி:


நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்கள் தினமும் ஒரு ஏலக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.


சர்க்கரை நோய்:


சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் ஏலக்காய் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.


#Cardamom #Digestion #tipes

நட்டநடு ராத்திரி வரை கொட்ட கொட்ட விழித்திருக்கும் குழந்தை

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More