IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆன்லைனில் கார் வாங்க ஆசைபட்டு ரூ.7.50 லட்சம் பணத்தை இழந்த வாலிபர்

Get real time updates directly on you device, subscribe now.

புதுக்கோட்டையில் ஆன்லைனில் கார் வாங்க ஆசைப்பட்டு ரூ.7.50 லட்சத்தை வாலிபர் ஒருவர் இழந்துள்ளார்.

இணையதள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் நாம் உபயோகிக்கும் அனைத்து பொருட்களும் ஆன்லைனில் கிடைக்கின்றது. நேரில் பார்த்து வாங்குவதை விட, ஆன்லைன் மூலம் வாங்குவது எளிதாக இருப்பதால் ஆன்லைன் வர்த்தகத்தையே அனைவரும் விரும்புவதால், அதற்காக வரவேற்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

எந்த விஷயமாக இருந்தாலும் எவ்வளவு சாதகம் இருக்குமோ, அதே அளவு பாதகமும் இருக்கும் என்பதை போல ஆன்லைன் வர்த்தகத்திலும் சில இழப்புகள் நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி உள்ளது. இதே போல் ஆன்லைன் மூலம் கார் வாங்க ஆசைப்பட்டு ஒருவர் ரூ.7.50 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஹரிஸ் (34). இவர் கார் வாங்க ஆசைப்பட்டு இணையதளத்தில் காரினை தேடி உள்ளார். அப்போது அவருக்கு பிடித்த கார் ஒன்று தென்படவே அக்காரின் உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளார். அவரோ காருக்கான தொகை ரூ.7.50 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தும் படி தெரிவித்துள்ளார். இவரும் கார் பிடித்து விட்டதால் அவர் கேட்ட தொகையை வங்கியில் செலுத்தி உள்ளார்.

ஆனால் கார் உரிமையாளரோ தெரிவித்த படி காரை கொடுக்க வில்லையாம். பணத்தை திருப்பி கேட்டும் சரியான பதலளிக்கவில்லையாம். இதனால் ஏமாற்றம் அடைந்த ஹரிஸ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader