IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

திருமணமான ஐந்தே நிமிடத்தில் உயிரிழந்த மணமக்கள்! உறவினர்கள் அதிர்ச்சி!!

Get real time updates directly on you device, subscribe now.

திருமணமாகி ஐந்து நிமிடங்களில் ஏற்பட்ட விபத்தில் மணமக்கள் பலியாகிய சம்பவம் நடந்துள்ளது. கோர விபத்தில் மணமகனும், மணமகளும் பலியானதால் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.


அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹார்லி மோர்கன் (வயது 19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பவுட்ரியாக்ஸ் (வயது 20) என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து மணம் முடித்து வைப்பதற்கான வேலைகள் நடந்தன.


சம்பவத்தன்று ஆங்குள்ள ஆர்ஞ்ச் சிட்டி கோர்ட்டில் நீதிபதிகள் முன்னிலையில் ஹார்லி மோர்கன், பவுட்ரியாக்ஸ் ஜோடி திருமணம் நடந்தது. இதில் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்கள். பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்ற ஆசைக் கனவுகளோடு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த மணமக்களுக்கு அங்கிருந்த அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.


வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்ட அவர்கள், கோர்ட் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி, வரவேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்படத் தயாரானார்கள். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று மணமக்கள் அமர்ந்திருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் மணமக்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.



திருமணம் முடித்த ஐந்தே நிமிடங்களில் மணமக்கள் பலியான இந்த சம்பவத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader