IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு தொகையில் 30% வரை மூலதன மானியம் – தமிழக அரசு

Get real time updates directly on you device, subscribe now.

மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு தொகையில் 30% வரை மூலதன மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க நிலம் வாங்கும் செலவில் 50% மானியம் எனவும் அறிவித்துள்ளது.

C பிரிவு மாவட்டங்களில் எல்காட், சிட்கோ, சிப்காட் நிலங்களுக்கு 100% முத்திரை தாள் கட்டண சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்பொருள் நிறுவனம் உற்பத்தியை தொடங்கியதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி கிடையாது.

முதலில் பணியில் சேரும் பெண் தொழிலாளர்களுக்கு பயிற்சி மானியமாக ரூ.6,000 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கப்படும். பின்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இடிபி, அறிவுசார் மூலதனம் மற்றும் தரச்சான்றிதழ் மானியம் உள்ளிட்ட மானியங்கள் வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்தது.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader