IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய தொழிலதிபர்! வியக்க வைக்கும் மாமனிதர்

Get real time updates directly on you device, subscribe now.

கொரனோ வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவின் பேரில் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் மக்களின் பயம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கொரனோ வைரஸின் பரவல் அதிகரிப்பதால் அவர்களை தனிமைப்படுத்துவதில் போதிய வசதிகள் இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளன. இதனால் தெற்கு ரயில்வே நிர்வாகம் தாமாக முன்வந்து கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர்களை ரயிலில் தனிவார்டுகளாக அமைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கும் ஒருபடி மேலே போய் நடிகர் பார்த்திபன் கே.கே.நகரில் உள்ள அவரது இரண்டு வீடுகளை மருத்துவ பயன்பாட்டிற்காக தரப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் தன்னைப் போல இரண்டு வீடுகள் இருப்பவர்களும் தாமாக முன்வந்து உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அப்பகுதியில் உள்ள நோயாளிகள் தங்கவைத்து சிகிச்சை அளிக்க போதுமானதாக இருக்கும் என்றார்.

இவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், தனது அலுவலகத்தை ஏழை எளிய மக்களின் கொரனோ சிகிச்சைக்காக வழங்க முன்வந்துள்ளார். இதை உறுதி செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேற்கொண்டு பலரும் இதைப் போலவே உதவ முடிவெடுத்து இருக்கின்றனர் என்றார்.

இவற்றையெல்லாம் விட ஒருபடி மேலே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தொழிலதிபர் ஒருவர். கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தன் நியோட்டியா என்பவர் தனக்குச் சொந்தமாக உள்ள 30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றி, மருத்துவமனையாகச் செயல்பட மாநில அரசுக்குத் தற்காலிகமாக வழங்கியுள்ளார். இவர் கொடுத்த யோசனையை அம்மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இது குறித்து நியோட்டியா, “ஒரு நெருக்கடி உள்ளது. இந்த நிலைமையைக் கடந்து செல்வதற்கான பயனுள்ள ஒரு உள் கட்டமைப்பு எங்களிடம் உள்ளது. இந்த நேரத்தில் நாங்கள் எந்தவொரு வணிக அம்சங்களையும் சிந்திக்கவில்லை, எங்களால் முடிந்த அளவுக்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “நாங்கள் இதன் பயன்பாட்டிற்காக எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. இது அரசாங்கத்திடம் உள்ளது. இதனை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் வசதிக்காக அல்லது மருத்துவ ஊழியர்களின் குடியிருப்பாகக்கூடப் பயன்படுத்தப்படலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் முன்னணி தொழிலதிபர் ஹர்ஷவர்தனுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவரைப் போன்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி, தனது பங்களிப்பாக வீடுகளின்றி, சாலையோரத்தில் வசித்து வரும் ஏழை மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரசி மூட்டைகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இப்பணியை விரைவில் ஓர் தனியார் அமைப்பிடம் கங்குலி ஒப்படைப்பார் என்றும் மேற்குவங்க கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More